"ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தம்"

0 347

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தம் என்றும், அதை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால், அந்நாட்டை மதித்து பேச்சு நடத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியதற்கு ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க நடவடிக்கை எடுக்காமல், அணுகுண்டு குறித்துப் பேசி மக்களை பீதியிலேயே வைத்திருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments